சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கௌஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு 4 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பதுங்கி இருந்த சன்னி லாய்டை கடந்த ஜனவரி மாதம் திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.