சோமாலியாவில் குகைகளில் பதுங்கி இருந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிபர் ஜோ பைடன், விரைவாக தேவையான உத்தரவைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், அமெரிக்காவை தாக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் தேடி கண்டுபிடித்து கொல்வோம் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.