திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புறவழிசாலையில் மாட்டு பாதை என்ற இடத்தில் தாமரை குளத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் நோக்கி சென்று மாட்டுப்பாதை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கரூரை சேர்ந்த கார்த்தி என்பவர் காரை ஒட்டி வந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்து முன்னாள் சென்ற கார் மீது மோதியதில் இரண்டு கார்களும் தூக்கி வீசப்பட்டது. இதில் இரண்டு கார்களும் மூன்று முறைக்கு மேல் சுற்றி ரோட்டில் விழும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் ராஜேஷ் குடும்பத்தினர் 5 பேர் காயம் அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பதபதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது