திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையின் நடுவே கூட்டமாக மாடுகள் சுற்றித்திரிந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இந்த மாடுகளால் விபத்துகள் ஏதும் ஏற்படுவதற்கு முன்பு இது சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.