தொப்பம்பட்டி: அரசு மேல்நிலை பள்ளியில் ஆங்கில நாள் விழா

53பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தொப்பம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் அரசு பள்ளியில் பயன்று வரும் மாணவ மாணவிகள் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் ஆங்கில நாள் விழா என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் , உணவு மற்றும் உணவுபொருட்கள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தொப்பம் பட்டி , கீரனூர் , முத்துநாயக்கன் , மேல்கரை பட்டி , தாளையம் , மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவ மாணவிகள் , தண்ணீர் சிக்கனமான பயான்பாடு குறித்தும் ஆங்கிலத்தில் உரையாடியும் , சினிமா பாடல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடியும் , பறவைகள் போல வேடமிட்டும், மரம் வளர்ப்பதின் பயன்பாடு , மரத்தை அழித்தால் காற்றை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் என்ற நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கபட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி