டெல்லி சட்டபேரவை தேர்தலில் பாஜக 45 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 36 இடங்கள் என்ற பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளதால் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வரவுள்ள நிலையில், முதலமைச்சர் பதவிக்கு மனோஜ் திவாரி, விஜேந்தர் குப்தா, வீரேந்திர சச்தேவா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதலமைச்சர் யார் என்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.