திருப்பதி மலையில் உள்ள தேவஸ்தானத்தின் தங்கும் அறையில் ஓய்வுபெற்ற ஆந்திர தலைமை காவலர் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீனிவாசலு என்பவர் தனது குடும்பத்தாருடன் அறையில் தங்கியிருந்த நிலையில் பிள்ளைகள் வெளியே சென்ற போது மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.