டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 45 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இந்த நிலையில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 7:45 மணிக்கு வருகிறார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி குறித்து பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்ற உள்ளார்.