சென்னை மணலி பகுதியில் உள்ள புது நகரில் நான்கு நாட்கள் வேலைக்கு வராததால் கண்டித்த மேலாளர், சுத்தியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டெய்னர் பெட்டக மேலாளரான சாய் பிரசாத் என்பவரை மது போதையில் சுத்தியால் அடித்து கொலை செய்துவிட்டு இரண்டு இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.