மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது

62பார்த்தது
மயில்களை விஷம் வைத்து கொன்றவர் கைது
புதுக்கோட்டை: ஆலங்குடி பகுதியில் மேலாத்தூர் கிராமத்தில் தேசியப் பறவையான மயில்கள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மாவட்ட வன சரக அலுவலர்கள் சதாசிவம் மற்றும் வனவர்கள் மேலாத்தூர் கிராமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பா என்பவர் மயில்களுக்கு விஷம் வைத்துக் கொன்றது தெரியவந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி