ரெட்டியார்சத்திரம்: ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு கனிகாப்பு

65பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுள்ளி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு கதிர் நரசிங்கபெருமாள் திருக்கோவில். இங்கு பெருமாள், ஸ்ரீபூதேவி, ஸ்ரீதேவியுடன், ஸ்ரீகதிர்நரசிங்க பெருமாளாக அருள் பாலிக்கிரார். இக்கோவில் மலைக்கோவிலான அருள்மிகு கோபிநாத சுவாமி கோவிலின் உப கோவிலாகும். மூலவரான லட்சுமி சமேத கதிர்நரசிங்க பெருமாளுக்கு இராஜ அலங்காரமும், உற்சவருக்கு திருப்பதி ஏகாந்த சேவை அலங்காரமும் செய்திருந்தனர்.

முன் மண்டபத்தில் உற்சவர் ஏகாந்த சேவை அலங்காரத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருந்தார். கோவிலின் அக்னி மூலையில் உள்ள வீர ஆஞ்சநேயருக்கு மா , பலா , வாழை , சீதாப்பழம், கொய்யாப்பழம் , அன்னாசி, மாதுளை எலுமிச்சை, ஆரஞ்சு , நெல்லிக்கனி , திராட்சை, செவ்வாழை , வால்பேரி , முலாம்பழம், வில்வ பழம், வெண்பூசணி, சர்க்கரை பூசணி உட்பட 20 வகை பழங்களை கொண்டு கனிகாப்பு சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர்

அதிகாலை முதல் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலில் குவிந்தவண்ணம் இருந்தனர்.
சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் சீனிவாசன், தலைமையிலான விழா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். சுவாமிக்கான அலங்காரத்தை கோவிலின் தலைமை குருக்கள் சுகுமார் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி