திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலபட்டி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி காவடி எடுத்து வந்தனர் இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசணம் செய்தனர்.