ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மகா பிரத்தியங்கிரா யாகம்

59பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலில் புரட்டாசி மாத மஹாலய அமாவாசை முன்னிட்டு இன்று மாலை கோவில் வளாகத்தில் 108 உயிர் மூலிகைகள், 108 மருந்துகள் , பூக்கள், பழங்கள் ஆகியவற்றை கொண்டு மஹா பிரத்தியங்கரா யாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த பிரத்தியங்கரா யாகம் முன்பு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் பக்த்ர்களுக்கு காட்சியளித்தார். மேலும் பத்ரகாளி அம்மனுக்கு வெள்ளி கவச அலங்காரம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. யாகத்திர்க்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகி பாண்டி சிறப்பாக செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி