அய்யம்பாளையம்: விவசாய கிணற்றில் மின்மோட்டார் திருட்டு

81பார்த்தது
வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகளான சண்முகநாதன், முருகன், முத்துசாமி ஆகியோர்களின் கூட்டு விவசாய நிலங்களில், நிலக்கடலை, தக்காளி, மிளகாய், முருங்கை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர்.

 இவர்கள் தங்கள் கிணற்றில் இலவச மின் இணைப்பை பயன்படுத்தி விவசாய பயிர்கள் சாகுபடி செய்ய கிணற்று பாசனத்தையே நம்பியுள்ளனர். வியாழக்கிழமை இரவு வந்த மர்ம நபர்கள் 50, ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டார், இரும்பு பைப்புகள், மின் வயர்கள், ஸ்டார்ட்டர் பெட்டி உள்ளிட்ட அனைத்தையும் திருடி சென்றுவிட்டனர். இதனால் விவசாய பயிர்களுக்கு நீர் பாசனம் செய்ய முடியாமல் பயிர்கள் அனைத்தும் கருகும் நிலையில் இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

ஏற்கனவே இவர்களது தோட்டத்தில் மின்வயர்கள் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி