திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர் பாம்பு கடித்து மருத்துவ மனையில் அனுமதி.
திண்டுக்கல் அச்சனம்பட்டி அருகே பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த அழகப்பன் மகன் பெருமாள் (67). இவர் பெருமாள் கோவில்பட்டியில் தோட்டத்தில்
வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது.
இதனால், அவர் மயக்கம் போடவே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.