வனத்துறை. வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆதரவால் வெட்டி கடத்தப்படும் அரிய வகை மரங்கள். தொடரும் மரக் கொள்ளைக்கு ஆதரவாக அதிகாரிகள் அரசியல்வாதிகள் செயல்படுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பலியாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாளமலை அடுக்கம் பகுதிகளில் அந்நிய மரங்கள் என்று கூறி அரியவகை மரங்கள் வெட்டி கடத்தல் நடக்கிறது. எந்த மரத்திலும் வனத்துறை குறியீடு கிடையாது. வனத்துறை செக்போஸ்ட் அருகே லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. மரங்கள் அடுக்கம் வழியாக வந்து, கொடைக்கானல் கோட்டாட்சியரும் கண்டுகொள்ளாமல் சென்றது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.