அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்த கவுன்சிலர்

69பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பதினைந்தாவது வார்டு கவுன்சிலர் நாகஜோதி என்பவர் கவுன்சிலராக உள்ளார்.


அப்பகுதியில் 10 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் தொட்டி உள்ளது. தண்ணீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாததால் தண்ணீர் தொட்டியின் கீழே கடை அமைக்கும் பணியில் கவுன்சிலர் ஈடுபட்டுள்ளார்.


அதை கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்து கவுன்சிலர் நாகஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கவுன்சில நாகஜோதி கொடைக்கானல் நகராட்சி இடம் அனுமதி பெற்று கட்டி கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.


அதற்குரிய ஆவணங்களை காண்பிப்பதற்கு மறுத்ததால் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.


இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இதனைக் குறித்து கொடைக்கானல் காவல்துறையினிடம் தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார் இதனால் அப்பகுதி மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி