நாடு முழுவதும் சிறந்த முதலமைச்சர்களுக்காக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில், சிறந்த முதலமைச்சர்களின் பட்டியலை தேசிய ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில், 35.3% வாக்குகளுடன் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முதல் இடத்தையும், 10.6% வாக்குகளைப் பெற்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 5.2% வாக்குகளைப் பெற்று 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.