அரசு அனுமதியின்றி ஜேசிபி வாகனங்கள் இயக்கம்

60பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சம் அழகுடன் இயற்கை வளங்களுடன் அமைந்துள்ளது கொடைக்கானல். அதன் மலைப்பகுதியில் கனரக வாகனங்கள் ஜேசிபி, போர்வெல் இயந்திரம் ஆகிய வாகனங்கள் இயங்குவதற்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் அரசு அனுமதியின்றி ஜேசிபி வாகனம் இயக்கப்பட்டது. மலை உச்சிகள் மீது வாகனம் இயக்கப்படுவதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் பல்வேறு பகுதிகளில் அரசு அனுமதியின்றி கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றது. குறிப்பாக பூம்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி ஜேசிபி வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. மலை உச்சிகள் மீது தங்கும் விடுதிகள், ஏ பிரேம், டூம் ஹவுஸ் போன்றவைகள் கட்டுவதற்கு ஜேசிபி வாகனங்கள் உபயோகப்படுத்தப்படுகிறது.

இது போன்று கட்டுமானங்கள் தொடர்வதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கேரளாவின் வயநாடு போல் பெரும் அசாம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அரசு அனுமதியின்றி இயக்கப்படும் ஜேசிபி வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி