தெலங்கானா: ஹைதராபாத்தில் அரசு பேருந்தில் 3 பெண்கள் குடுமிபிடி சண்டை போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹக்கீம் பெட் டிப்போவில் இருந்து பொல்லாரம் ஸ்டாப் வரை பயணித்த பெண்களுக்கு இடையே இருக்கையில் அமர்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், 3 பெண்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.