Plastic Ice VII எனப்படுகின்ற நான்காவது வடிவப் பனிக்கட்டியை அறிவியலாளர்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த அரிய ஒரு நிலையானது நீர் மூலக்கூறுகள் திடமான அமைப்பில் இருக்கும் போது தடையின்றி சுழல அனுமதிக்கிறது. வழக்கமான ஒரு பனிக்கட்டியைப் போலல்லாமல், Plastic Ice VII ஆனது ஒரு கடினமான அமைப்பைக் கொண்டிருந்தாலும், மூலக்கூறு சுழற்சியை அனுமதிக்கிறது. புவியின் வளிமண்டல அழுத்தத்தினை விட 3 ஜிகா பிக்சல்ஸ் அதாவது சுமார் 30,000 மடங்கு அதிக அழுத்தத்தின் கீழ் பனி உருவாகிறது.