கொடைக்கானலில் பூண்டி, கிளாவரை, வில்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மலைப்பூண்டு அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவடைந்ததாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ மலைப்பூண்டு 400 ரூபாய் முதல் 450 வரை விற்பனையான நிலையில், இந்த ஆண்டு ஒரு கிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.