23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை - மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 19ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆன்லைன் மூலம் தொடங்குகிறது. டிக்கெட் விலை ரூ.1700, ரூ.2500, ரூ.4000, ரூ.3500, ரூ.7500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவரால் 2 டிக்கெட்டுகளை மட்டுமே வாங்க முடியும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், போட்டிகளுக்கான டிக்கெட்டை WWW.district.com என்று முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.