வாக்கு எண்ணிக்கை மையம் நேரில் ஆய்வு

80பார்த்தது
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சில்வார்பட்டி கிராமம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி புதன்கிழமை மதியம் 1 மணியளவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது: -

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் திண்டுக்கல் சில்வார்பட்டி கிராமத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகள் ஆகியவை சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தரைத்தளத்தில், திண்டுக்கல் மற்றும் பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும், முதல் தளத்தில் நத்தம் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும், இரண்டாம் தளத்தில் ஒட்டன்சத்திரம் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி