திண்டுக்கல்: வடகிழக்கு பருவ மழை தொடர்பான தகவல்

84பார்த்தது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள தமிழக அரசு TN-Alert இணையதள செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியினை

Google Play store/ஐஓஎஸ் ஆப் ஸ்டோரின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் அடுத்த நான்கு நாட்களுக்குள் வானிலை முன் அறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழைளவு, நீர்த்தேக்கங்களின் தற்போது நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்திற்கு உட்பட்டதா என்பது போன்ற தகவல்களை அறியும் வசதியுள்ளது.

மேலும் பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புக்களாகும் மக்கள், தங்கள் புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிருவாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மழைப்பொழிவு மற்றும் இயற்கை இடர்பாடுகள் குறித்த புகார்களையும் பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது கைப்பேசிகளில் TN-Alert என்கிற இணையதள செயலியினை பதிவிறக்கம் செய்து வடகிழக்கு பருவ மழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிந்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி