நண்பரின் மனைவியிடம் சில்மிஷம்

6726பார்த்தது
திண்டுக்கல் அருகே பழைய வக்கம்பட்டி பகுதியில் நண்பரின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது.

திண்டுக்கல் அருகில் உள்ள பழைய வக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் அருண் செல்வம் வயது 25. கூலித் தொழிலாளி இவரும் அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பரும் ஒன்றாக வேலைக்கு செல்வது வழக்கம். புத்தாண்டு முதல் நாள் அன்று அருண் செல்வம் தனது நண்பருடன் மது குடித்தார். அருண் செல்வம் தனது நண்பருக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

பிறகு நள்ளிரவில் அவரது வீட்டிற்கு சென்று நண்பரின் மனைவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் சத்தம் போடவே இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்று விட்டார். நேற்று காலை திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இது குறித்து சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி வழக்கு பதிவு செய்து அருள் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி