திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் அண்ணா நகர் பகுதியில் குப்பைகள் அதிகம் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் மாணவ, மாணவியர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டிகளை இடமாற்றி வைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.