சர்வதேச சுற்றுலா தளமான கொடைக்கானலில் ஏராளமான உள்நாடு வெளிநாடு வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து போவதுண்டு சமீபகாலமாக கொடைக்கானல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்களான கஞ்சா காளான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் பில்டிங் சொசைட்டி பகுதியில் தனியார் விடுதியில் கஞ்சா வைத்திருந்த மதுரையை சேர்ந்த பாலாஜி 21, வினோத் வயது 24,
யோகேஸ்வரன் 22 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த 320 கிராம் கஞ்சாவை கைப்பற்றி கொடைக்கானல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பாலாஜி மீது திருப்பூரில் இரண்டு வழக்கும், மதுரையில் மூன்று வழக்கும்.
வினோத் குமார் மீது மதுரையில் மட்டும் ஏழு வழக்குகள் நிலுவையில் அதில் இரண்டு கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது.
யோகேஸ்வரனுக்கு நாகமலை புதுக்கோட்டையில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.