திருமணமான 5 மாதத்தில் இளைஞர் பலி

62பார்த்தது
திருமணமான 5 மாதத்தில் இளைஞர் பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை- தாதமலைப்பட்டியை சேர்ந்தவர் குணசீலன் (29). நத்தம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். செப். 11-ல் குடகிப்பட்டி பகுதியில் வசூல் செய்து விட்டு டூவீலரில் ஊர் திரும்பினார். மணக்காட்டூர் அருகே மேற்குப்பட்டி பகுதியில் வந்தபோது புளிய மரத்தில் மோதியது. தொடர்ந்து நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குணசீலன் நேற்று (செப்.13) இறந்தார். இவருக்கு 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்தி