திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாணார்பட்டியில் இருந்து ஈச்சர் வேன் ஒன்று மணல் ஏற்றி கோபால்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. சாணார்பட்டி அருகே பெத்தாம்பட்டியைச் சேர்ந்த ரவி (வயது 40) என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். கோபால்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தபோது தலையாரிபட்டியைச் சேர்ந்த முருகன் (வயது 45) என்பவர் இருசக்கர வாகனத்தில் சாலையின் குறுக்கே வந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த வேன் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த முருகன் என்பவர் காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நல்வாய்ப்பாக வேலை ஓட்டி வந்த ஓட்டுநர் காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் சாலையில் கவிழ்ந்த வேன் ஜேசிபி வாகனம் மூலம் நிமிர்த்தப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்யப்பட்டது. விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.