தமிழகத்தின் மாநில மரமாக இருக்கும் பனை மரத்தை வெட்டி சாய்த்த கும்பல். ஒரு பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றாலே ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு உள்ள நிலையில் பத்துக்கும் மேற்பட்ட பனை மரங்களை தங்களுடைய சுய லாபத்திற்காக வேரோடு அளித்த அவல நிலை.
தற்பொழுது தமிழகத்தின் மாநில மரமாக இருக்ககூடிய பனை மரத்தை மேலும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசு நிலங்கள் நீர் நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சியினை திருவிழா போல ஏற்பாடு செய்து அதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை அழைத்து நட்டு வருவது வழக்கம். இதற்கிடையே திண்டுக்கல் அருகே உள்ள உலுப்பக்குடி பகுதியில் தங்களுடைய சுய லாபத்திற்காக எந்த ஒரு அனுமதியும் பெறாமல் பத்துக்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு சாய்த்த நபர்கள். ஒரு பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றாலே ஆட்சியரின் அனுமதி முக்கியம் என்ற நிலையில் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.