திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் சென்றது. அதன் பேரில் நத்தம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தர்மர் உள்ளிட்ட போலீசார் நத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிறுகுடி மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் வெள்ளைச்சாமி (60) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து வெள்ளைச்சாமியை கைது செய்து அவர் வைத்திருந்த ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.