ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மோகன் (48). இவரது வீட்டின் அருகே போர்வெல் மோட்டாரில் இருந்த மின்சார வயர் திருட்டு போனது. அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரித்ததில் மெட்டூர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (53), திருடியது தெரியவந்தது. அதன்படி அவரை போலீசார் கைது செய்தனர்.