அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் படுகாயம்

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து கோட்டையூர் நோக்கி சென்றது. கோட்டையூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கருத்தலக்கம்பட்டி வழியாக நத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சிவகங்கை மாவட்டம் கண்டபாளையம் தர்மப்பட்டியைச் சேர்ந்த சக்திவேலு மகன் சுரேஷ் (வயது 23) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் கோட்டையூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

கருத்தலக்கம்பட்டி சாலை வளைவில் திரும்பிய போது எதிரே வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் மோதி பலத்த காயமடைந்தார். காயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி