திண்டுக்கல்: காவல் நிலையம் முன்பு இந்து அமைப்பினர் பஜனை

68பார்த்தது
திண்டுக்கல் R. V நகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவர் வழக்கமாக எப்பொழுதும் காவி உடை அணியும் பழக்கம் கொண்டவர். புரட்டாசி மாதம் என்பதால் காவி உடையுடன்
நாமம் போட்டுக்கொண்டு திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்திற்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பாக புகார் அளிக்க சென்றார். அப்பொழுது காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் எட்வர்ட் குணாளன் என்பவர் இவரது தோற்றத்தை பார்த்து
இது என்ன பஜனை மடமா இப்படி வந்திருக்கிறாய் என கோபமாக பேசி வெளியே போ
என விரட்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த மாதவன், இது குறித்து தனது நண்பர்களிடம் கூறவே, பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் காவல் நிலைய வாயில் முன்பு நெற்றியில் நாமம் போட்டவாறு பஜனையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி