கட்டட பொருட்கள் கண்காட்சி துவக்கம்

570பார்த்தது
கட்டட பொருட்கள் கண்காட்சி துவக்கம்
திண்டுக்கல் பில்டர்ஸ் அசோசியேஷன் சேர்மன் தர்மலிங்கம், செயலாளர் பால்ராஜ், பொருளாளர் மாரியப்பன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் ஆரோக்கிய செல்வராஜ், செயலாளர் சுரேஷ் கூறியதாவது: திண்டுக்கல்லில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், எம். எம். கிரியேஷன் இணைந்து தேசிய அளவிலான கட்டட பொருட்கள் கண்காட்சியை திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பி. எஸ். என். ஏ. , மகாலில் இன்று துவங்கி மூன்று தினங்கள் நடக்கிறது. திண்டுக்கல் எஸ். பி. , பிரதீப் திறந்து வைக்கிறார். முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் தாமோதரன், பில்டர்ஸ் அசோசியேஷன் சேர்மன் பழனிவேல், முன்னாள் சேர்மன்கள் ஜனகர், குழந்தைவேல் குத்துவிளக்கேற்றுகின்றனர். காலை 9: 00 மணி முதல் இரவு 8: 30 மணி வரை நடக்கும் இதில் தினமும் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி