திருவிழா நடத்தக்கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு

63பார்த்தது
திண்டுக்கல் அருகே உள்ளது ஏ. வெள்ளோடு இங்குள்ள பெரிய கோவில் புனித தெரசாள் சந்தியாகப்பர் ஆலய ஆண்டு திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா நடைபெறும் சில ஆண்டுகளாக சட்டப்படி நிறுவப்படாத பரம்பரை நாட்டாண்மை மற்றும் மணியக்காரர் ஊர் ஜூரிகள் என்ற கோதாவில் பொதுமக்களை சட்டத்துக்கு புறம்பான தண்டனைகளுக்கு உட்படுத்தி முறையான கணக்கு வழக்கு சமர்ப்பிக்கப்படாமல் இருந்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்கு கொடுத்து சென்று விட்டனர். இந்நிலையில் ஊர் மக்கள் ஒன்று கூடி புதிய தலைவர் சின்னப்பர் செயலாளராக ஸ்டீபன் துரை பொருளாளராக யாகப்பன் ஆகியோரை தேர்வு செய்துள்ளனர். எனவே தெரசாள் சந்தியாகப்பர் ஆலய திருவிழாவை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட தலைவர் சின்னப்பர் தலைமையில் நடத்த அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென கிராம மக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி