தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டியில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது என தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார். மேலும் அவர், இத்தகைய வானிலையில் மக்கள் ஒரே இடத்தில் கூடும் போது நீர்ச்சத்து குறைபாடு எளிதில் ஏற்படும். மாலை 4 மணி வரை இந்நிலை தொடரும். பிறகு படிப்படியாக வெப்பம் குறைந்து இரவு பனிப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ளார்.