தனது சொத்தை பிரித்து தரக் கோரி மனு

64பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது சொத்தை பிரித்து தரக் கோரி மனு கொடுத்த கூலித் தொழிலாளி அய்யம்பெருமாள் மாடுகளுடன் வந்ததால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் ராஜக்கபட்டியை சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவர் தனது மாடுகளுடன் திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. அய்யம்பெருமாளின் தாத்தா பெரியசாமி. அவருக்கு ராஜக்காபட்டி பகுதியில் 85 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலமானது பெரியசாமி மற்றும் அவரது சகோதரர்கள் பெயரில் கூட்டு பட்டாவாக உள்ளதால் அந்த நிலத்தை பிரித்து தர மற்ற உறவுகள் மறுப்பதாகவும், பெரியசாமி உடல்நிலை மோசமாக உள்ளதால் மருத்துவ செலவிற்காக நிலத்தை விற்பதற்கு பிரித்து தர மறுக்கிறார்கள்.

மேலும் அவரிடத்தில் மாடுகளை விடுவதர்கூட அனுமதி மறுக்கப்படுகிறது ஆகவே மாடுகளுடன் மனு கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்ததாக தெரிவித்தார். விவசாயக் கூலி அய்யம்பெருமாள் மாடுகளுடன் மனு கொடுக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி