தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கருப்புபேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட மற்றும் வட்டார கல்வி மையங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செவ்வாய்க்கிழமை மாலை 6. 30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார பொறுப்பாளர் வினோத் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ராஜேந்திர பிரசாத் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் இயற்றப்பட்ட அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும். தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி கோஷமிட்டனர். மேலும் 3 நாட்களுக்கு பள்ளிகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவதோடு, தொடர் ஆர்ப்பாட்டம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி