திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளாக செயல்பட தண்ணீர் தொட்டியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தரேவு ஊராட்சி 8 வது வார்டு கதிர் நாயக்கன் பட்டி தெற்கு தெருவில் தண்ணீர் தொட்டி உள்ளது.
இது கடந்த 3 ஆண்டுகளாக செயல்படமால் உள்ளது. இப்பகுதியில் தண்ணீர் வந்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. தண்ணீரை தற்போது விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் கண்டு கொள்வது இல்லை. நடவடிக்கை எடுக்கவில்லை. கேட்டால் நிதி பற்றாக்குறை என்று கூறு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.