திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மணப்பாறையை சேர்ந்த ராமமூர்த்தி வயது 53 சின்னாளபட்டியை சேர்ந்த மணிகண்டன் வயது 53 ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 62 ஆயிரம் மதிப்புள்ள 1434 லாட்டரி சீட்டுகள், ரூ. 37, 500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேற்படி சம்பவம் குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.