பூமி பற்றி அதிகம் கேள்விப்படாத சுவாரசியமான உண்மைகளை காண்போம். பூமியின் 70%க்கும் அதிகமான பகுதியை நீர் சூழ்ந்துள்ளது, 75% வளிமண்டல பகுதி, கடலின் மேற்பரப்பில் இருந்து முதல் 11 கிமீ உயரத்தில் காணப்படுகிறது. பூமி தோராயமாக 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பூமியில் மிகவும் வெப்பமான இடமாகக் கருதப்படும் பல்வேறு பகுதிகள் உள்ளன. ஆனால் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிக வெப்பநிலை கொண்ட இடம் அமெரிக்காவில் உள்ள டெத் வேலியில் உள்ளது.