கொலை மிரட்டல் விடுத்தாரா சரண்யா பொன்வண்ணன்?

575பார்த்தது
கொலை மிரட்டல் விடுத்தாரா சரண்யா பொன்வண்ணன்?
நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது பக்கத்துக்கு வீட்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்த உண்மை வெளியாகியிருக்கிறது. சரண்யாவின் மகளுடன் வந்த உறவினரிடம் கார் நிறுத்துவது தொடர்பாக நடந்த பிரச்சனையில் ஸ்ரீதேவி ஆபாச வார்த்தையில் பேசியதாகவும், இந்த சத்தம் கேட்டு வந்த சரண்யா மற்றும் பொன்வண்ணன், ஏன் எப்ப பார்த்தாலும் இப்படி பண்ணுறீங்க என கேள்வியெழுப்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். உடனே ஸ்ரீதேவி சிசிடிவி காட்சிகளை எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் என புகார் அளித்தார். அதுகுறித்த விசாரணையில் ஸ்ரீதேவியின் குடும்பம் அண்டை வீட்டாரிடம் எப்போதும் சண்டையிடுவது வழக்கம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி