தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் எரிவாயு நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தில் நேற்று (ஜன. 06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்தனர். வாகனத்தில் சிலிண்டர்கள் இல்லாதபோது விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.