உடல் மற்றும் ரத்தத்தின் சீரான செயல்பாட்டிற்கு இரும்புச் சத்து மிக முக்கியம். உடலில் இரும்புச் சத்து குறைபாட்டால் பலவித பிரச்னைகள் ஏற்படும். பேரீச்சம்பழம், மாதுளை, அத்திப்பழம், கொய்யாப்பழம், உலர்திராட்சை, ஆப்ரிகாட், மாம்பழம், தர்பூசணி பழம் போன்றவற்றில் அதிக இரும்புச் சத்துக்கள் உள்ளன. எலும்புகள் வலுவாக இருக்க, இரும்புச் சத்து அவசியம். ஆண்களை விட பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவைப்படுகிறது.