தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரியாற்றில் கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழைக்கு ஏற்ப ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் காலையில் 18, 000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக சரிவை சந்தித்த நிலையில் நேற்று செப்டம்பர் 17 பிற்பகல் நிலவரப்படி வினாடிக்கு 8000 கனஅடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. அடுத்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்கவும் பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் அவர்கள் அனுமதி வழங்கி உள்ளார் மேலும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காவிரி கரையோரங்களில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.