பென்னாகரம் அருகே உள்ள அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் சுமதி. அரசு செவிலியரான இவர் கருவில் உள்ள பாலினம் கண்டறிந்து கூறியதாகவும், கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அவருடைய வீட்டில் சுகாதார துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கருக்கலைப்புக்கு பயன்படுத்தப் படும் மருந்துகள் வீட்டில் இருப்பது தெரியவந்தது. அவற்றை சுகாதார துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவருடைய வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இதுதொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பென் னாகரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.