தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் உத்தரவின் பேரிலும் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன் ஆகியோர் அறிவுரையின்படி பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் நடந்தது. ஒகேனக்கல் மீன்வள பண்ணை பணியாளர்கள் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் ஒகேனக்கல் அரசு மீன் பண்ணை பணியாளர்களும் ஒன்றிணைந்து மீன் விற்பனை கூடாரம் மற்றும் குளிர்பான கடைகள் முதலைப் பண்ணை பகுதியில் உள்ள மீன் வறுவல் கடைகள் உள்ளிட்ட இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மீன் வறுவல் கடைகளில் இருந்து மீன் வறுவலுக்கு மீண்டும் மீண்டும் உபயோகித்த எண்ணெயை கைப்பற்றி அழித்தனர்.
மீன் வருவல் மற்றும் மளிகை கடைகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியதுடன், சுற்றுலா பயணிகளுக்கும் ஒகேனக்கல் பகுதியில் உணவுகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் & மீன்வளத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு வழங்கினர். இந்த ஆய்வில் நல்லம்பள்ளி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரண்குமார் மீன் வளத்துறை மேற்பார்வையாளர் குமரவேல் மீன்வள தேர்வு நிலை பாதுகாவலர் ஜீவா மீன்வள உதவியாளர் அருண் ஜேசுதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.