பென்னாகரம்: அரசு பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு

60பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அக்டோபர் 10 இன்று வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விரிவான ஆய்வு மேற்க் கொண்டார் தொடர்ந்து முதலமைச்சர் காலை உணவு தயாராவதில் தாமதம் என்பதை அறிந்து அது குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார்.

மின்சார நீர் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் கசிந்துள்ளது. இதனை அறிந்த ஆசிரியர்களும், பணியாளர்களும் காலையில் அதனை பழுது பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர். பழுதுப் பார்த்துக் கொண்டிருந்த பணியாளர்களிடம் இனி மேல் இதுபோன்ற மின் கசிவு ஏற்படாத வகையில் சீரமைக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து முதலமைச்சர் காலை உணவு திட்டப் பணியாளர்களுடன் உரையாடி, உணவின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி